பாரடைஸ் கடற்கரையில் கரைஒதுங்கிய ஆகாய தாமரைகள்: சுற்றுலா பயணிகள் அவதி

புதுச்சேரி: புதுச்சேரி, நோனாங்குப்பம், சுண்ணாம்பாறு படகு குழாமில் பாரடைஸ் பீச் உள்ளது. கொரோனா ஊரடங்கிற்குபின் மழையும் ஓய்ந்த நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அங்கு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனிடையே நிவர், புரெவி புயல் காரணமாக புதுச்சேரியின் சங்கராபரணி, திருக்காஞ்சி உள்ளிட்ட ஆற்றில் இருந்து அடித்து வரப்பட்ட ஆகாயத்தாமரை செடிகளில் பெரும்பாலானவை பாரடைஸ் பீச் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் குவியல் குவியலாக ஆகாயத் தாமரை செடிகள் படர்ந்து அங்கு துர்நாற்றம் வீசுவதோடு, விஷஜந்துகளின் நடமாட்டமும் அதிகமாகி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மேலும் நிவர் புயல் காரணமாக பாரடைஸ் பீச்சில் போடப்பட்டிருந்த குடில்கள் சில சேதமடைந்து சரிந்த நிலையில் அவற்றை சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்க பயன்படுத்த முடியாத வகையில் கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே பாரடைஸ் பீச்சை நேரில் ஆய்வு செய்து சுற்றுலா பகுதியான இவற்றை உடனடியாக புனரமைக்க வேண்டும். மேலும் அங்கு கடற்கரை பகுதியில் இடையூறாக காய்ந்த நிலையில் படர்ந்து கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளையும் உடனே அப்புறப்படுத்தி சுற்றுப்புற தூய்மையை பாதுகாக்க வேண்டுமென சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர். புதுச்சேரி அரசு உடனே நடவடிக்கை எடுக்குமா?

Related Stories: