திருட்டை தடுக்க, பணத்தை பாதுகாக்க டாஸ்மாக் கடைகளுக்கு 500 கிலோ எடையில் லாக்கர்: நிர்வாகம் முடிவு

சென்னை: தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தடாஸ்மாக் கடைகளில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களை தவிர்க்க பாதுகாப்பற்ற கடைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. அதன்படி, 2,825 கடைகள் கண்டறியப்பட்டது. அங்கு 500 கிலோ எடை கொண்ட பணப்பெட்டிகள் வைக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது. இதற்கான பணிகள் தற்போது 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்தநிலையில், பாதுகாப்பற்றவையாக கண்டறியப்பட்ட கடைகளை தவிர்த்து மற்ற கடைகளிலும் பணப்பெட்டிகள் பழுதடைந்து இருப்பதாகவும், எடை குறைந்து இருப்பதாகவும் நிர்வாகத்திற்கு ஊழியர்கள் தெரிவித்தனர். எனவே, இந்த கடைகளிலும் பணப்பெட்டிகளை மாற்றித்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

இதேபோல், ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் கடந்த 4ம் தேதி டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விரைவில் 500 கிலோ எடை கொண்ட பணப்பெட்டிகள் வைக்கப்பட உள்ளது. இதுகுறித்த டெண்டர் விரைவில் கோரப்பட உள்ளது.

Related Stories: