செய்கூலியில் தள்ளுபடியுடன் திருமண நகை வாங்குவோருக்கு தனிஷ்க் புது திட்டம் அறிமுகம்

சென்னை: திருமணம் வைபவங்களுக்கான நகைகளை வாடிக்கையாளர்கள் வாங்க உதவியாக, டைட்டனின் நகை விற்பனை பிரிவான தனிஷ்க், ‘ரிவா ஆசீர்வாத்’ என்ற பிரத்யேக திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் முடிவில் கட்டணம் செலுத்தும்போது செய்கூலியில் சிறப்பான தள்ளுபடியை பெறலாம். ஆசீர்வாத் என்ற இந்த திட்டத்தின் பெயரை போலவே, தங்க வடிவிலான ஆசீர்வாதமாக இது அமைகிறது. வாடிக்கையாளர்களின் வாழ்வில், திருமணத்தில் நகை வாங்குவது மிகப்பெரிய செலவாக உள்ளது. இதற்காக முன்கூட்டியே திட்டமிடுவார்கள். அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான மாதாந்திர திட்டத்தில் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் உள்ளது. சலுகைகள் இதில் உறுதிப்படுத்தப் படுகின்றன.

இதுகுறித்து டைட்டன் நிறுவனத்தின் நகை விற்பனை பிரிவு தலைமை நிர்வாக அலுவலர் அஜய் சாவ்லா கூறுகையில், ‘‘இந்திய கலாசாரத்தை பொறுத்தவரை தங்க நகை வாங்குவதும், அணிவதும் முக்கியத்துவம் மிக்கது. திருமண வைபவங்களில் இதுவே முக்கிய அம்சம். பெற்றோர் தங்கள் மகளுக்கு முடிவற்ற அன்பும் ஆசீர்வாதமும் கிடைக்கும் வகையில் சிறந்த நகைகளை பரிசலிக்கின்றனர். இந்த உணர்வை அங்கீகரிக்கும் விதமாக ரிவா ஆசீர்வாத் திட்டம் அமைந்துள்ளது. இதில், கவர்ச்சிகரமான செய்கூலி தள்ளுபடியுடன் நகைகளை வாங்கலாம் என்றார்.

Related Stories: