மயிலாடுதுறையில் கோட்டாட்சியர் அலுவலக கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது: அரசு ஊழியர் படுகாயம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஆங்கிலேயர் காலத்தில் 1907ம் ஆண்டு மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டது. இந்த அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட கோட்டாட்சியர்கள் மற்றும் சப்-கலெக்டர்கள் பணியில் இருந்துள்ளனர். பழமை மாறாமல் அப்படியே இந்த கட்டிடத்தில் தொடர்ந்து இயங்கி வந்தது, அவ்வவ்போது மழை நேரத்தில் மழைநீர் ஒழுகுவதை சரி செய்து வந்தனர். கடந்த 6 தினங்கள் தொடர் மழையால் நகரில் பல்வேறு பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் நேற்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணியிலிருந்த முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் அமர்ந்திருந்தபோது மேற்கூரை பெயர்ந்து அவர் மீது விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார்.

இதையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பாலமுருகன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: