பண்ருட்டி பகுதிகளில் தொடர் மழையால் 1000 ஏக்கர் கொய்யா மரங்கள் சேதம்

பண்ருட்டி: பண்ருட்டி வட்டத்தில் உறையூர், கரும்பூர், குறத்தி, அக்கடவல்லி, திருத்துறையூர், பெரிய கள்ளிப்பட்டு. கண்டரக்கோட்டை, புலவனூர் உள்பட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் கொய்யா பயிரிட்டு வருகின்றனர்.

இந்த வருடம் கொய்யாவில் காய் இறங்கும் நேரத்தில் கொரோனா நோய் தொற்றால் கொய்யா பழங்கள் பறித்து ஏற்றுமதி செய்ய முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவற்றில் இருந்து கொஞ்சம் மீண்டு வந்தபோது தொடர் மழையின் தாக்குதலால் மீண்டும் அதே சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு கொய்யாப்பழங்களை பறிக்க முடியாததால் கொய்யாப் பழங்கள் மரத்தில் இருந்து அழுகி கீழே கொட்டுகின்றன.

மரங்களும் பல இடங்களில் சாய்ந்து விழுந்தன. இந்த மழையால் கொய்யாவில் பூ, பிஞ்சுகள் கருகிப் போய்விட்டன. இதனால் கொய்யா விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கொய்யா விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: