மழைநீர் அதிகமாக செல்வதால் 24 மணி நேரமும் ஆற்றின் கரைகளை கண்காணிக்க வேண்டும்-பொதுப்பணி துறையினருக்கு அறிவுறுத்தல்

திருவாரூர் : அனைத்து ஆறுகளிலும் மழை நீரானது அதிக அளவில் செல்வதால் பொதுப்பணித்துறையினர் ஆற்றின் கரைகளை இரவு பகலாக தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் திருவாரூரி கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.நிரெவி புயல் புயல் எச்சரிக்கையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக கனமழை மற்றும் அடை மழை பெய்து வருகிறது.

இதனையொட்டி அனைத்து ஆறுகளிலும் மழை நீரானது வெள்ளம்போல் செல்லும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று நன்னிலம் தாலுகா வண்டாம்பாளை அருகே செல்லும் சித்தாற்றினை கலெக்டர் சாந்தா நேரில் ஆய்வு செய்தார். அப்போது அனைத்து ஆறுகளிலும் மழை நீரானது அதிக அளவில் செல்வதால் பொதுப்பணித்துறையினர் ஆற்றின் கரைகளை இரவு பகலாக தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், மாவட்டத்தில் மழை பாதிப்பினை கருத்தில் கொண்டு அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரணம் முகாம்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அரசு அலுவலர்கள் அனைவருக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் இருந்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். ஆய்வின்போது வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முருகவேல் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: