நாடு முழுவதும் ஆவலை ஏற்படுத்திய மாநகராட்சி தேர்தல்: ஐதராபாத்தில் இழுபறி: 2வது இடத்தை பிடித்தது பாஜ

ஐதராபாத்: ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. ஆனாலும், பாஜ முதல் முறையாக 48 இடங்களில் வெற்றி பெற்று 2வது இடத்தை பிடித்துள்ளது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத்  மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 1ம் தேதி நடந்தது. இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் இம்முறை, இத்தேர்தலில் கடும் போட்டி நிலவியது. கடந்த முறை 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜ, இம்முறை மேயர்  பதவியை பிடிக்கும் முயற்சியில் தீவிர பிரசாரம் செய்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்ததால் இத்தேர்தல் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றது. இந்த மாநகராட்சியின் மொத்த இடங்கள் 150. கடந்த 1ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 40 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவாகின. இதன் வாக்கு எண்ணிக்கை ேநற்று நடந்தது. இதன் முடிவை நாடே ஆவலுடன் எதிர்பார்த்தது.

ஆனால், இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கடந்த முறை இந்த மாகராட்சியை ஆட்சி செய்த ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்), இம்முறை 56 இடங்களை மட்டுமே பிடித்தது. பாஜ 49  இடங்களிலும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 43 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மைக்கு தேவையான 76 இடங்களை எந்த கட்சியும் எட்டாததால் இழுபறி ஏற்பட்டுள்ளது. ஆனாலும், பாஜ 2வது இடத்தை  பிடித்திருப்பது, அக்கட்சிக்கு புதுதெம்பை தந்துள்ளது. இந்த வெற்றியை பாஜ.வின் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Related Stories:

>