சட்டவிரோதமாக மான் வேட்டையில் ஈடுபட்டவர் கைது

சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா கோபிநத்தம் அடுத்து தரேகட்டு வனப்பகுதியில் வாலிபர் ஒருவர் சட்டவிரோதமாக நுழைந்து நாட்டு துப்பாக்கி மூலம் மான் வேட்டையாடி அதன் இறைச்சியை பைக்கில் எடுத்து செல்ல முயற்சித்து வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது பைக்கில் வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக வந்தார். இவரை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அப்போது 25 கிலோ மான் இறைச்சி இருப்பது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் இவர் தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டம் அச்சட்டி தாலுகா நடரபாளையா கிராமத்தை சேர்ந்த சக்தி (எ) கோபால் என்றும், மானை வேட்டையாடி இறைச்சியை எடுத்து செல்வதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த வனத்துறையினர் அவரிடமிருந்த ஒரு நாட்டு துப்பாக்கி, செல்போன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து வனப்பாதுகாப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>