திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் பெண்ணின் தாயார் சுட்டுக்கொலை: காதலன் வெறிச்செயல்

புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த ஷமாகான்(45) என்பவரது மகளும், டெல்லிவாழ் வாலிபரும் காதலர்கள். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இந்நிலையில், காதலன் கடந்த திங்களன்று பெண்ணை நேரில் சந்தித்து திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தினார். இதனால் இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது, அந்த வாலிபர் ஆத்திரத்தில் தன்னிடம் மறைத்து வைத்திருந்து துப்பாக்கியை எடுத்து பெண்ணை நோக்கி சுட்டார். இதனை கண்ட பெண்ணின் தாயார் தனது மகளை காப்பாற்ற அவரை தடுத்து முன்னே சென்றபோது, துப்பாக்கி குண்டு அவர் மீது பாய்ந்து இறந்துவிட்டார். போலீசார் தப்பியோடிய பெண்ணின் முன்னாள் காதலனை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே, குண்டடிபட்ட இளம் பெண் தற்போது ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்ககள் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தார்.

Related Stories:

>