பூடான் பிரதமர் லோடேவுடன் இணைந்து 2ம் கட்ட ரூபே கார்டு திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு ஆகஸ்டில் பூடான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அப்போது அந்நாட்டு பிரதமருடன் இணைந்து முதல்கட்டமாக ரூபே கார்டு திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் இரண்டாவது கட்ட ரூபே கார்டு திட்டத்தை பிரதமர் மோடியும் பூடான் பிரதமர் லோடே ஷெரிங்கும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நேற்று தொடங்கிவைத்தனர். இதன் மூலம் ரூபே கார்டு வைத்திருக்கும் பூடான் நாட்டை சேர்ந்தவர்கள் இதனை இந்தியாவில் பயன்படுத்தலாம்.

 

இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “இஸ்ரோ தயாரிப்பின் மூலமாக பூடான் செயற்கை கோளை விண்வெளியில் செலுத்துவது, பூடானுடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே ஆழமான ஒத்துழைப்பு இருக்கின்றது. கொரோனா நோய் தொற்றின் இந்த கடினமான நேரத்தில் பூடானுக்கு ஆதரவாக இந்தியா துணை நிற்கும். அண்டை நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்தியா எப்போதும் முன்னுரிமை அளிக்கும்” என்றார்.

Related Stories: