பழையதை பெயர்க்காமல் மேலே தரமற்ற சாலை அமைப்பு தமிழகத்தில் விதிகளை பின்பற்றி சாலைகள் அமைக்கப்படுகிறதா?: விரிவாக பதிலளிக்க அரசுக்கு உத்தரவு

மதுரை: விதிகளை பின்பற்றி சாலை அமைக்கப்படுகிறதா என்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை செயலர் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

 கன்னியாகுமரி மாவட்டம், பத்தறையைச் சேர்ந்த அந்தோணி முத்து, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் விதிப்படி சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால் சாலையின் மட்டம் உயரமாகியுள்ளன. இதனால், மழைநீர் வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. தரமற்ற சாலையால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. எனவே, குருந்தன்ேகாடு ஒன்றிய பகுதியில் நடந்த சாலைப் பணிகளை நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யவும், பழைய சாலையை முழுமையாக அப்புறப்படுத்திய பிறகே, புதிய சாலைகள் அமைப்பதை உறுதிபடுத்தவும், இதன்பிறகே ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘தமிழகத்தில் சாலைகள் அமைக்கும்போது விதிகளை பின்பற்றுவதில்ைல. பழைய சாலைகளை பெயர்த்து எடுப்பதில்லை. அதன்மேல் பகுதியில் தரமற்ற சாலைகள் போடப்படுகிறது. இதனால், சாலைகள் அதிக உயரத்திலும், குடியிருப்புகள் பள்ளத்திலும் இருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த வழக்கில் நெடுஞ்சாலைத்துறை செயலர் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். அவர், சாலைகள் அமைப்பது தொடர்பாக என்ன விதிகள் உள்ளன. அரசாணை மற்றும் விதிகளை பின்பற்றி சாலைகள் அமைக்கப்படுகிறதா என்பது குறித்து, விரிவாக பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

Related Stories: