தடையை மீறி பட்டாசு விற்பனை போலீசில் சிக்கிய தந்தையை காப்பாற்ற போராடிய சிறுமி: வைரல் வீடியோவை பார்த்து மனமிறங்கிய முதல்வர் யோகி

லக்னோ: தடையை மீறி பட்டாசு விற்றதால் போலீசாரல் கைது செய்து இழுத்துச் செல்லப்பட்ட தனது தந்தையை காப்பாற்ற, போலீசாரின் ஜீப்பில் தலையை முட்டிக் கொண்டு கதறி அழுத சிறுமி மீது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காற்று மாசு காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமாகி வருவதால், டெல்லி, கர்நாடகா, ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உட்பட பல மாநிலங்களில், தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதையும் மீறி இம்மாநிலங்களில் சில இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. கடைகளில் பட்டாசுகளும் விற்கப்பட்டன. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், புலந்த்சார் மாவட்டத்தில் உள்ள குர்ஜா நகரில் உள்ள கடைத்தெருவில் கடந்த 12ம் தேதி ஒருவர் தடையை மீறி பட்டாசு விற்றார். அங்கு சோதனைக்கு வந்த போலீசார், அந்த நபரை அடித்து இழுத்துச் சென்றனர். இதை பார்த்த அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர்.

அவருடைய சுமார் 9 வயதுள்ள சிறுமி கதறி அழுதபடியே பின்னால் ஓடினாள். போலீசாரின் ஜீப்பில் தனது தலையை பலமாக பலமுறை முட்டி, தந்தையை விட்டு விடும்படி கதறி அழுது கெஞ்சினாள். ஆனால், போலீசார் அந்த குழந்தையை விலக்கி விட்டு, ஜீ்ப்பை எடுத்துச் சென்றனர். இக்காட்சிகள் அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இது, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கவனதுக்கும் சென்றது. அந்த வீடியோ காட்சியை பார்த்து அதிர்ந்து போன அவர், உடனடியாக அந்த சிறுமியின் தந்தையை விடுவிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து, சிறுமியின் தந்தையை கடந்த 14ம் தேதி போலீசார் விடுதலை செய்து, வீட்டுக்கே அழைத்துச் சென்று விட்டனர். ேமலும், அந்த சிறுமிக்கு பரிசுப் பொருட்களும், இனிப்புகளும் வாங்கி சென்று கொடுத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர். இந்த சம்பவம், பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: