வலங்கைமான் அடுத்த ஆலங்குடி கோயிலில் குரு பெயர்ச்சி விழா: தங்க கவசத்தில் குரு பகவான் அருள்பாலித்தார்

வலங்கைமான்:   திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில்  நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான ஆபத்சகாயேஸ்வரர் கோயில்  உள்ளது.  இக்கோயில் திருஞானசம்பந்தரால் பாடல்பெற்றது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருபெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.  இந்நிலையில் குருபகவான் நேற்று தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசம் செய்தார். அதனை முன்னிட்டு  குருபெயர்ச்சி விழா நடைபெற்றது.    

முன்னதாக காலை குரு பெயர்ச்சி விழா   ஹோமம்  நடைபெற்றது. பின்னர் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கலங்காமல் காத்த விநாயகர் ஆபத்சகாயேஸ்வரர் சுப்பிரமணியர் ஏலவார்குழலி சுவாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.  குரு பகவானுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டது. வழக்கமாக  குரு பெயர்ச்சிக்கு முன் மற்றும் குரு பெயர்ச்சிக்கு பின் என  இரண்டு முறை நடைபெறும் லட்சார்ச்சனைகள் கொரோனா  காரணமாக  நடைபெறவில்லை. குருபெயர்ச்சி விழா நிகழ்ச்சிகள்  யுடியூப் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனால் அதிக அளவில் பக்தர்கள் கூடவில்லை.

Related Stories: