தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய கேரள முதல்வர் பினராயின் செயலாளருக்கு கொரோனா: விசாரணையில் இருந்து 3 வாரம் எஸ்கேப்

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்க கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஆஜராகும்படி அமலாக்கத் துறையால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட, முதல்வர் பினராய் விஜயனின் கூடுதல் தனி செயலாளருக்கு கொரோனா தொற்று  கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில்  தொடர்புடைய, முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலாளரான ஐஏஎஸ் சிவசங்கர் கைது  செய்யப்பட்டார். தற்போது,  அமலாக்கத் துறையின் காவலில்  விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கிடையே,  சிவசங்கரிடம் நடத்திய விசாரணையில், அவரது மோசடி குறித்து முதல்வர் பினராய்  விஜயனின் கூடுதல் தனிச்செயலாளர் ரவீந்திரனுக்கும் தெரியும் என்பது  தெரியவந்தது.

ரவீந்திரனுக்கு தெரியாமல் சிவசங்கர் எந்த காரியத்தையும் செய்ய  மாட்டார் எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை சிவசங்கரும் விசாரணையின்ேபாது ஒப்புக்கொண்டார். இதையடுத்து, ரவீந்திரனிடம் விசாரிக்க அமலாக்கத்துறை  தீர்மானித்தது. விசாரணைக்காக கொச்சி அலுவலகத்தில் நேற்று ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில்,  ரவீந்திரனுக்கு கடந்த 4ம் தேதி கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில்  நேற்று முன்தினம் வந்த முடிவில் அவருக்கு ெதாற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, திருவனந்தபுரம் அரசு மருத்துவ  கல்லூரி மருத்துவமனையில் ரவீந்திரன் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 10 நாட்கள் கழிந்து  பரிசோதனை முடிவு நெகட்டிவானால் மேலும் 7 நாட்கள் தனிமையில் இருக்க  வேண்டும். அதன் பிறகே அவர் வெளியே வரமுடியும். இதனால், 3 வாரங்களுக்கு பிறகே அமலாக்கத் துறை  அவரிடம் விசாரணை நடந்த முடியும்.

Related Stories: