விண்வெளியில் இருந்து கும்பமேளாவை பார்க்கலாம்!

அலகாபாத் கும்பமேளா இப்போது அகில உலக ஃபேமஸ். இந்துக்களின் புனித நிகழ்வு எனப்படும் இந்த வைபவத்தில் கலந்துகொள்ள நாடு முழுதும் இருந்து அனைத்து ரிஷிகளும், துறவிகளும் குழுமுவார்கள். இந்து மதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் ஒன்று சேரும் மாபெரும் ஒன்றுகூடலான இந்நிகழ்வில் உலகம் முழுதும் இருந்தும் பக்தர்களும் சாரிசாரியாக திரண்டு பங்கேற்பார்கள்.

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மாபெரும் இந்த இந்து மதத் திருவிழாவில் கடந்த 2011ம் ஆண்டு ஏழு கோடி பேர் கலந்துகொண்டார்கள். விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட படம் ஒன்றில் இந்த மாபெரும் ஒன்றுகூடல் காட்சி பதிவாகியிருக்கிறது.

Related Stories: