கேரள போலீசாருடனான மோதல் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தமிழகத்தில் தேடப்படும் குற்றவாளி: 2016ல் அரசு நோட்டீஸ் வெளியிட்டது

திருவனந்தபுரம்: கேரளாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தேனி மாவட்டத்தை  சேர்ந்த வேல்முருகன், 2016 முதல் தமிழக போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம், வயநாடு மாவட்ட வனப்பகுதியில் மவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை வயநாடு படிஞாறேத்தர போலீஸ் சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் ‘தண்டர் போல்ட்’ அதிரடிப்படையினர் ரோந்து சென்றனர். அப்போது, அதிரடிப்படையினருக்கும், மாவோயிஸ்ட்டுளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த, தமிழகத்தின் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த வேல்முருகன் (32) சுட்டுக் கொல்லப்பட்டார். ஒருவர் காயமடைந்தார். கொல்லப்பட்ட வேல்முருகன், கடந்த 2016 முதல் தமிழக கியூ பிராஞ்ச் போலீசாரால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது. 2016 ஜனவரி 6ம் தேதி தமிழக உள்துறை செயலாளர் சார்பில் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. அதில் வேல்முருகன் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: