ஏடிஎம் கொள்ளையை தடுக்க புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: ஏடிஎம் அறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருந்தபோதிலும் அவற்றை மறைத்தும் கொள்ளை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். ஏடிஎம்மில் கொள்ளையடித்தால் அது நடக்காது என்று எண்ணுகிற அளவிற்கு புதிய தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி, அவற்றை பொது மக்களும், வங்கி வாடிக்கையாளர்களும் அறிந்துகொள்ளும் வகையில் தெளிவுப்படுத்த வேண்டும். பிடிபட்டவர்களுக்கு உடனடியாக, கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் இத்திருட்டில் ஈடுபட இருப்பவர்களுக்கு அது ஒரு பாடமாக அமைய வேண்டும்.

மீண்டும் இதுபோன்ற முயற்சியில் ஈடுபடாதவாறு தடுக்கப்பட வேண்டும். வங்கிகள் காவல்துறையை மட்டுமே நம்பி இருக்காமல் வங்கிகளும் முறையான காவல் பணியை பலப்படுத்தியும், தொழிற்நுட்ப வசதியை அதிகப்படுத்தியும் ஒரு புதிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: