2019-2020 ம் ஆண்டில் விளம்பரத்திற்காக ரூ.713 கோடி செலவளித்துள்ளது மத்திய அரசு; ஆர்டிஐ தகவல்

மத்திய அரசு இந்த ஓராண்டில் மட்டும் விளம்பரத்திற்காக  ரூ.713 கோடி செலவிட்டு உள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. மத்திய மாநில அரசுகள் தங்களது செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக பல்வேறு ஊடகங்கள் மூலம் விளம்பரங்களைச் செய்து வருகிறது. அதிலும் கடந்த சில ஆண்டுகளாக எல்லா அரசுகளுமே அரசு தரப்பில் விளம்பரங்களுக்காக அதிக அளவு செலவு செய்கிறது.

மும்பையைச் சேர்ந்த ஜதின் தேசாய் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2019-2020ம் ஆண்டில் மத்திய அரசு விளம்பரத்திற்காகச் செலவிட்ட தொகை குறித்து மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் கேள்வி இட்டிருந்தார் எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், நடப்பாண்டில் மத்திய அரசு விளம்பரத்திற்காக 713.20 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகவும், சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1.95 கோடி செலவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதில் 295.05 கோடி ரூபாய் அச்சு ஊடக விளம்பரங்களுக்கும், 317.05 கோடி ரூபாய் மின்னணு ஊடக விளம்பரங்களுக்கும், 101.10 கோடி ரூபாய் போஸ்டர், பேனர் உள்ளிட்ட திறந்தவெளி விளம்பரத்திற்கும் செலவிடப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: