டிசம்பர் மாதத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி தயாரிகிவிடும்...!! சீரம் இந்தியா நிறுவன சிஇஓ தகவல்

டெல்லி: கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை எதிர்பார்த்து உலகமே காத்திருக்கிறது. பல நாடுகளைச் சேர்ந்த பல்வேறு தடுப்பூசிகள் பரிசோதனை கட்டத்தில் இருந்து வருகின்றன. இதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியும் முன்னனியில் இருந்து வருகிறது. ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியின் முதல்கட்ட பரிசோதனைகள் சாதகமான முடிவுகளை தருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த பரிசோதனைகளை ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

கிளினிகல் சோதனைகள் வெற்றிகரமாக அமைந்தால், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசியான கோவிஷீல்டு, டிசம்பர் மாத துவக்கத்தில் பயன்பாட்டுக்கு தயாராகி விடும் என சீரம் இந்தியா நிறுவன சிஇஓ அதார் பூனாவல்லா தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட்டில் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசிக்கான உரிமம் பிரிட்டன் மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஜெனகாவுக்கு கிடைத்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக திறன்வாய்ந்த நோய்எதிர்ப்புத் திறனை இந்த தடுப்பூசி உருவாக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ள நிலையில், பல நாடுகளில் இந்த தடுப்பூசி 3 ஆம் கட்ட சோதனையில் உள்ளது.

Related Stories: