மானூர் அருகே டிரான்ஸ்பார்மரில் திடீர் தீயால் பரபரப்பு

மானூர்: மானூர் அருகேயுள்ள உக்கிரன்காேட்டை மாெட்டையனூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் மின் விநியோகம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. ஆனாலும் மின்மாற்றியில் ஏற்பட்ட தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. தீயை அணைக்க அதிகாரிகள் முன்வராததால் அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர்.

அதிகாரிகள் எச்சரிக்கையை தொடர்ந்து முயற்சியை கைவிட்டனர். சம்பவ இடத்துக்கு உக்கிரன்கோட்டை மின்வாரிய அலுவலர் ஆனந்த்ராஜ் மற்றும் ஊழியர்கள் சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து டிரான்ஸ்பார்மர் பழுது நீக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. அதிகாலை இச்சம்பவம் நடந்ததால் வீடுகளில் டிவி. உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பயன் படுத்தவில்லை. இதனால் பாதிப்பு ஏற்படாமல் தப்பியது.

Related Stories:

>