ரூ.13,780 பறிமுதல் விவகாரம் சார் பதிவாளர் மீது வழக்கு

சென்னை: பம்மல் சார் பதிவாளர் அலுவகத்தில் கணக்கில் வராத ரூ.13,780 பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சார் பதிவாளர் தினேஷ் உட்பட 12 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னை பம்மல் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடந்த 17ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பம்மல் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.13,780 சிக்கியது.

இதுகுறித்து அங்கு பணிபுரியும் சார் பதிவாளர் தினேஷ் (45), உதவியாளர்கள் ஜாபர், வரபிரசாத் (33), ரஞ்சித் (30), ராமமூர்த்தி, டேடா என்ட்ரி ஆப்ரேட்டர் உமா மகேஸ்வரி, முருகன் உள்ளிட்ட 12 பேரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. கைப்பற்றப்பட்டது லஞ்சம் பணம் என தெரியவந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை சார் பதிவாளர் தினேஷ் உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>