பயிர்க் கழிவுகள் எரிப்பை தடுக்க ஒரு நபர் குழு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் குளிர்காலங்களில் காற்று மாசு தொடர்ந்து அதிகமாகி வருகிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். டெல்லியை சுற்றியுள்ள உத்தர பிரதேசம், பஞ்சாப், அரியானா மாநிலங்களில், அறுவடை முடிந்த பிறகு நிலத்தில் எஞ்சியுள்ள பயிர்க்கழிவுகளை எரிப்பது வழக்கம். இதனால் ஏற்படும் புகையே டெல்லியில் கடும் காற்றுமாசை ஏற்படுத்துகிறது.  இது தொடர்பாக, ஆதித்யா துபே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது, உத்தர பிரதேசம், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி மதன் பி லோகூர் தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்படுவதாக தலைமை நீதிபதி பாப்டே அறிவித்தார்.

Related Stories: