2.85 கோடிக்கு சொத்து மோடியிடம் 45 கிராம் தங்க மோதிரங்கள்: 31,450 ரொக்கம் மட்டுமே கையிருப்பு: பிரதமர் அலுவலகம் தகவல்

புதுடெல்லி: ‘பிரதமர் மோடியிடம் 45 கிராம் எடை கொண்ட 4 தங்க மோதிரங்கள், ரூ.31,450 ரொக்கம் மட்டுமே சொத்தாக உள்ளது,’ என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் அசையும்,அசையா சொத்துக்கள் குறித்த விவரங்களை பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி, பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.36 லட்சம் அதிகரித்துள்ளது.  கடந்த ஆண்டு ரூ.2.49 கோடியாக இருந்த அவரது சொத்தின் மதிப்பு, இந்தாண்டு கடந்த ஜூன் 30ம் தேதியின்படி ரூ.2.85 கோடியாக அதிகரித்துள்ளது. வைப்பு தொகையானது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.33 லட்சம் அதிகரித்துள்ளது.

அவரிடம் கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரப்படி ரூ.31.450 ரொக்கம் மட்டுமே உள்ளது.  காந்தி நகரில் உள்ள ஸ்டேட் வங்கியில் ரூ.3,38,173 இருப்பு உள்ளது. அதே வங்கியில் நிரந்தர வைப்பு நிதி கணக்கில் ரூ.1 கோடியே 60 லட்சத்து 28 ஆயிரத்து 39 இருக்கிறது. மேலும், 2012ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதியிட்ட ரூ.20 ஆயிரத்துக்கான எல் அண்ட் டி உள்கட்டமைப்பு பத்திரத்தை வைத்துள்ளார். பிரதமர் மோடி மொத்தம் 45 கிராம் எடை கொண்ட 4 தங்க மோதிரங்களை வைத்துள்ளார். அவற்றின் மதிப்பு ரூ-1,51,875. பிரதமரின் அசையும் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 75 லட்சத்து 63 ஆயிரத்து 618 ஆக உள்ளது.

குடும்ப சொத்து

பிரதமர் மோடிக்கு குஜராத் காந்தி நகரில் சொந்த வீடு உள்ளது. எனினும், இதில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பங்கு உள்ளது. ஒவ்வொருவருக்கும் 25 சதவீதம் பங்குகள் இந்த வீட்டில் உள்ளது. வீ்ட்டின் இதன் மொத்த இடம் 3,531 சதுரடி.  கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி இந்த வீடு வாங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 208-ஐ, இந்த நிலத்தில் மோடி முதலீடு செய்துள்ளார். இந்த சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1 கோடியே 10 லட்சமாகும்.

Related Stories: