கொரோனா வழிகாட்டுதல்களை மீறிய மத்திய அமைச்சர், மாஜி முதல்வர் மீது எப்ஐஆர் போடுங்க..! மத்திய பிரதேச ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு

குவாலியர்,:மத்திய பிரதேசத்தில் வரும் நவ. 3ம் தேதி 28 சட்டமன்ற ெதாகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடக்கவுள்ளன. அவற்றின்  முடிவுகள் நவ. 10ம் தேதி அறிவிக்கப்படும். இந்த தேர்தல் முடிவுகள்தான் ஆளும் பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சிைய கவிழ்க்குமா? தப்ப வைக்குமா? என்பது தெரியவரும். அதனால், பாஜக - காங்கிரஸ் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளனர். ஆனால், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் தலைவர்கள் என பலரும் கொரோனா

 கட்டுப்பாடுகளை மீறி பிரசாரங்களில் ஈடுபவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.

தேர்தல் பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் கொரோனா வழிகாட்டுதல்களை மீறி பிரசாரம் செய்வதால், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக கூடுகிறது. இதனால், தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, வழிகாட்டுதல்களை மீறிய தலைவர்கள் மீது வழக்குபதிய வேண்டும்’ எனக்கூறி மத்திய பிரதேசத்தின் உயர்நீதிமன்ற குவாலியர் பெஞ்சில் பொதுநல மனுவை குவாலியர் குடியிருப்பாளர் வழக்கறிஞர் ஆஷிஷ் பிரதாப் சிங்  என்பவர் தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி,  ‘கொரோனா வழிகாட்டலை மீறிய தலைவர்கள் மீது அக். 19ம் தேதிக்குள் எப்ஐஆர்  தாக்கல் செய்ய வேண்டும். புகார்தாரர் கூறிய பட்டியலில் உள்ள மத்திய அமைச்சர் நரேந்திர தோமர், முன்னாள் முதல்வர் கமல்நாத் உள்ளிட்ட பல தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவால், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், முன்னாள் முதல்வர் கமல்நாத், பிரதியுமான் சிங் தோமர், முன்னாலால் கோயல், சுனில் சர்மா, சதீஷ் சிகர்வார், பூல் சிங் பரையா மற்றும் ராம்னிவாஸ் ராவத் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

Related Stories: