நீலகிரி கலெக்டர் பெயரில் போலி இ-மெயில் உருவாக்கி மோசடி முயற்சி

ஊட்டி: நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கடந்த 10ம் தேதி என்னுடைய பெயரில் போலி இ-மெயில் முகவரி உருவாக்கி, மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு ஒரு மெயில் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் அமேசான் கிப்ட் கார்டு ஆன்லைனில் ஆர்டர் செய்து அதனை மற்றொரு மெயில் முகவரிக்கு அனுப்பும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் என் பெயர் மற்றும் நீலகிரி கலெக்டர் என உள்ளது. இதுகுறித்து எஸ்பி.யிடம் புகார் அளித்துள்ளேன். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எந்த தகவலாக இருந்தாலும் கலெக்டரின் அதிகாரப்பூர்வ இ-மெயில் முகவரியில் இருந்து மட்டும் மெயில் அனுப்பப்படும். எனது பெயரை பயன்படுத்தி ஏதேனும் மெயில் வந்திருந்தால் மெயில் மற்றும் லிங்க்கை பொதுமக்கள் கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.

Related Stories: