எந்த கடவுளும் சொல்லவில்லை: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

அக்டோபரில் தொடங்கும் நவராத்திரி பண்டிகையை தொடர்ந்து, தீபாவளி, மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று தொடர்ச்சியாக பல பண்டிகைகள் களைக்கட்ட உள்ளன. இது பற்றி  மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்  வர்தன் கூறுகையில், ‘‘கொரோனா பரவல் இன்னும் முழுமையாக ஓயாத நிலையில், பண்டிகைகளுக்காக மக்கள் அதிகளவில் கூடுவதும், பயணம் செய்வதும், உணவுகளைப் பகிர்ந்து கொள்வதும், வைரஸ் தொற்றை பல மடங்கு அதிகரிக்கும்.  இந்த கொண்டாட்ட உணர்வுகள், கொரோனா பரவலுக்கு காரணமாகி விடக் கூடாது. ஆடம்பரமாக, ஆர்ப்பாட்டமாக பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று எந்த மதமும், எந்த கடவுளும் நம்மிடம் கேட்கவில்லை. எனவே, பண்டிகைகளை  உங்கள் குடும்பத்தினருடன் வீட்டிலேயே பாதுகாப்பாகக் கொண்டாடுங்கள். கொரோனா வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்றுங்கள்,’’ என்றார்.

Related Stories: