தமிழக முதல்வர் வருகையால் பொலிவு பெறும் ஊட்டி நகரம்

ஊட்டி: தமிழக முதலமைச்சர் நீலகிரிக்கு வருவதாக கூறப்படும் நிலையில், ஊட்டி நகரில் உள்ள அனைத்து நடைபாதைகளில் உள்ள அலங்கார தடுப்புகளுக்கு வர்ணம் பூசும் பணி ஜோராக நடக்கிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா ஆய்வு பணிக்காக விரைவில்  நீலகிரி மாவட்டத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால், ஊட்டி நகரை அழகுப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளன. தற்போது சேரிங்கிராஸ் முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரையும் நடைபாைத ஓரங்களில் அலங்கார தடுப்புகள் அமைக்கும் பணிகள், தடுப்புச்சுவர்களில் ஓவியங்கள் வரையும் பணிகள்,

அலங்கார தடுப்புகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பூங்காவிற்கு செல்ல வாய்ப்புள்ளதால், தாவரவியல் பூங்கா செல்லும் சாலையோரங்களில் உள்ள அலங்கார தடுப்புக்களில் தற்போது வர்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. எனினும், முதல்வர் எப்போது வருகிறார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

Related Stories: