எச்சிலை மறக்காத கோஹ்லி

கொரோனா பீதிக்கு பிறகு பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்த ஐசிசி தடை விதித்துள்ளது. நோய் தொற்றை தடுக்க விதிக்கப்பட்ட இந்த விதியால் வேகப்பந்து வீச்சாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆனால், இதுவரை ஐபிஎல் போட்டியில் ஒரு பந்துவீச்சாளர் கூட எச்சிலை பயன்படுத்தி பந்தை பளபளப்பாக்க முயலவில்லை. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ராபின் உத்தப்பா, எச்சிலை பயன்படுத்தியதற்காக எச்சரிக்கப்பட்டார். இந்நிலையில் டெல்லி-பெங்களூர் இடையிலான போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது 3வது ஓவரை நவ்தீப் சைனி வீசிக் கொண்டிருந்தார். அவரது பந்து வீச்சை டெல்லி வீரர் பிரித்வி ஷா சிதறடித்துக் கொண்டிருந்தார். அதில் ஒருமுறை பந்தை தடுத்து எடுத்த பெங்களூர் கேப்டன் விராத் கோஹ்லி, எச்சிலை தொட்டு பந்து மீது தடவினார். சட்டென்று தெளிவான கோஹ்லி புன்னகையுடன், எச்சில் கையை பந்து மீது இருந்து எடுத்து விட்டார். ஆனாலும் அவர் நடவடிக்கைக்கு வழக்கம் போல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. போதாதற்கு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரும் அதை சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Stories: