திருப்புத்தூர் அருகே சாலையோர கிணற்றால் விபத்து அபாயம்: தடுப்புவேலி அமைக்க கோரிக்கை

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிணற்றால் விபத்து அபாயம் நிலவுகிறது. தடுப்புவேலி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூரில் இருந்து திருப்புத்தூர் வழியாக மானாமதுரை வரை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் திருப்புத்தூர் அருகே நெடுமரம் புதூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில், பில்லமங்கலம் விலக்கு பகுதியில் சாலையோரம் கிணறு உள்ளது. மதுரை, மேலூர், சிவகங்கை, திருப்புத்தூர் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து கீழச்சிவல்பட்டி, திருமயம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு இந்த சாலை வழியாகவே செல்ல வேண்டும்.

இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த கிணறு அமைந்துள்ள இடம் ரோட்டின் வளைவு பகுதியாக உள்ளது. ரோட்டிலிருந்து தரைமட்டத்திற்கு கிணறு இருப்பதால் வேகமாக வரும் வாகனங்கள், இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறினால் கிணற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகும் வாய்ப்புள்ளது. எனவே விபத்து நடந்து உயிர் பலி ஏற்படும் முன் கிணற்றுக்கு அருகே ரோடடில் தடுப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: