சோலார் விளக்குகள் பழுதால் இருளில் 10 மலைக்கிராமங்கள்

வருசநாடு: வருசநாடு அருகே சோலார் விளக்கு பழுதால் அரசரடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் இருளில் சிக்கியுள்ளன. இதனால் பொதுமக்கள், மாணவ மாணவியர் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். வருசநாடு அருகே அரசரடி, வெள்ளிமலை, பொம்ராஜபுரம், இந்திராநகர், கீழபொம்மராஜபுரம், இந்திராநகர், நொச்சிஒடை உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு சோலார் விளக்குகள் அரசு சார்பில் அமைக்கப்பட்டது.

தற்போது மழைக்காலம் என்பதால் சோலார் விளக்குகள் பழுதாகி உள்ளன. அவற்றை சரி செய்யாமல் உள்ளதால் மலைக்கிராமங்களில் வாழும் பொதுமக்கள் இருளில் பரிதவித்து வருகின்றனர், அரசடி கிராமத்தைச் சேர்ந்த ராமர் கூறுகையில்,  நாங்கள் மூன்று தலைமுறையாக இங்கு வாழ்ந்து வருகிறோம். எங்களை வெளியேற்ற வேண்டும் என வனத்துறை துடிக்கிறது. இதற்கிடையில் சோலார் விளக்குகளும் பழுதடைந்துவிட்டது. மேலும் மேகமலை ஊராட்சிக்குட்பட்ட மலைக்கிராமங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டன. ஏற்கனவே சில விளக்குகள் பழுதடைந்த நிலையில் இருந்தது தற்போது மழைக்காலம் என்பதால் அனைத்து சோலார் விளக்குகளும் முற்றிலும் பழுதடைந்து விட்டன.

இதனால் இரவு நேரங்களில் கழிப்பறைக்கு கூட செல்ல முடியாத நிலையில் பலர் பரிதவித்து வருகின்றன. முதியவர்கள் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, தேனி மாவட்ட கலெக்டர்ர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

Related Stories: