ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பகுதிநேர முனைவர் பட்டத்துக்கான பொது வாய்மொழித் தேர்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த்துறையின் பகுதிநேர முனைவர் பட்டத்துக்கான பொது வாய்மொழித்தேர்வு கல்லூரி கருத்தரங்க அறையில் நடந்தது. கல்லூரி முதல்வர் வெங்கடேசன் முனைவர் பட்ட மாணவரை அறிமுகம் செய்து வைத்து பேசினார். கல்லூரி நிறுவனர் பா.போஸ், காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை தாளாளர் அரங்கநாதன், தலைவர் வீரராகவன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மல்லிகா மாதவன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொது வாய்மொழித் தேர்வில் தமிழ்த்துறை பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர் தண்டபாணி திருவாசகப் பக்தி கோட்பாடு எனும் தலைப்பில் அவர் ஆராய்ச்சி செய்த ஆய்வு கட்டுரையை விளக்கி கூறினார். இந்த தேர்வின் புறத்தேர்வாளராக சென்னை மாநில கல்லூரியின் தமிழ்த்துறை இணைபேராசிரியர் சேக்மீரான், ஆய்வாளர் அளித்த விளக்கங்களையும் ஆய்வுக் கட்டுரையை பரிசீலித்து வினாக்களை எழுப்பி மதிப்பீடு செய்து சென்னைப் பல்கலைக்கு முனைவர் பட்டம் பெற பரிந்துரைத்தார்.

Related Stories: