தமிழக பாஜ பொதுச்செயலாளர் கே.டி.ராகவனுக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், தமிழக பாஜ பொதுச்செயலாளர் கே.டி.ராகவனுக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: