நாட்டை உலுக்கிய சம்பவம்: சித்திரவதை செய்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட உ.பி. பெண் உயிரிழப்பு...!!!

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில், சித்திரவதை செய்து பலாத்காரம் செய்யப்பட்ட பெண் கடந்த 2  வாரங்களாக மருத்துவமனை சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 14-ம் தேதி டெல்லியில்  இருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற கிராமத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் புல் வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த பெண் ஒருவரால் தாக்கப்பட்டு தனது  துப்பட்டாவால் வயல்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, அதை கிராமத்தைச் சேர்ந்த நான்கு ஆண்கள் அந்த பெண்ணை சித்திரவதை செய்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கிடையே, இந்த பெண் காணவில்லை என்பதை  உணர்ந்த அவள் தாய் அவளைத் தேடிச் சென்றார். மயக்க நிலையில் அப்பெண் காணப்பட்டபோது, பாம்பு கடித்ததாக கருதப்பட்டது.

ஆனால், அந்தப் பெண் பல எலும்பு முறிவுகளுடன் மிகவும் மோசமான நிலையில் இருந்தாள், அவளது நாக்கு கொடூரமான தாக்குதலில் வெட்டப்பட்டது. அவளுடைய நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவள் கழுத்தில் மூன்று எலும்புகள்  உடைந்துள்ளது. அவளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. தொடர்ந்து, அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  காவல்துறை அந்த பெண்ணை டெல்லி எய்ம்ஸுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், உத்தரபிரதேசம் சப்தர்ஜங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

 நேற்று வரை உத்தரபிரதேசத்தில் மருத்துவமனையில் ஐ.சி.யுவில் இருந்த பெண் 2 வாரங்களுக்கு பின் இன்று டெல்லிக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார். பெண்ணை பலாத்காரம் செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில்  அடைத்துள்ளனர். அந்தப் பெண் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர், தாக்குதல் நடத்தியவர்கள் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள். சமீபத்திய மாதங்களில் உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடத்துவரும் நிலையில், இந்த சம்பவம்,  பெண்ணின் காயங்கள் குறித்த விவரங்கள் வெளிவந்ததால் நாடு தழுவிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர் ஆரம்பத்தில் எங்களுக்கு உதவவில்லை, அவர்கள் விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் நான்கு-ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் செயல்பட்டார்கள் என்று பெண்ணின் சகோதர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டை உத்தரபிரதேச காவல்துறை மறுத்தது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம், ஆனால் நாங்கள் கைது செய்வதிலும், குடும்பத்திற்கு முடிந்தவரை உதவுவதிலும் நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். விரைவான  விசாரணையை நான் தனிப்பட்ட முறையில் உறுதி செய்வேன், மேலும் இந்த நபர்கள் விரைவான நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள் என்று ஹத்ராஸ் காவல்துறை தலைவர் விக்ராந்த் வீர் தெரிவித்திருந்தார்.

Related Stories: