அதிமுக ஆட்சியை பற்றி குறை யாராவது கூறினால் குடத்தால் குத்து விடுங்கள்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் அதிருப்தி

வேடசந்தூர்: அதிமுக ஆட்சி, முதல்வரை பற்றி யாராவது குறை கூறினால் தண்ணீர் குடங்களால் முகத்தில் குத்து விடுங்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டியில் நேற்று கூட்டுறவுத்துறை சார்பில் பெட்ரோல் பங்க் திறப்பு விழா, சுயஉதவி குழுக்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘அதிமுக ஆட்சி உண்மையாகவே நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை பற்றியோ அல்லது முதல்வரை பற்றி யாரேனும் தவறாக பேசினால் தண்ணீர் பிடிக்கும் குடங்களை கொண்டு முகத்தில் குத்து விடுங்கள். பொதுமக்கள் பஸ்கள் விட வேண்டும் என்று கேட்டனர். மதுப்பிரியர்கள் 12 மணிக்கு முன்பு கடையை திறக்க வேண்டும் என்று கேட்டனர். இரண்டுமே  அவர்கள் விருப்பப்படி செயல்பட்டு வருகிறது’’ என்றார். அமைச்சரின் பேச்சை கேட்டு அங்கிருந்த அதிகாரிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியமா? எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியமா? பாவம் கன்ப்யூஸ் ஆயிட்டாரு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பின் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறந்ததற்கு பதிலாக, தற்போது மாநிலங்களவை எம்பியாக இருந்து வரும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் இறந்ததாக நினைத்து, ‘அம்மாவின் (ஜெயலலிதா) அன்பையும், ஆதரவையும் பெற்றவர். அம்மா மீது பொய் வழக்கு போட்டபோதெல்லாம் அவருக்கு ஆறுதல் கூறியவர்’ என உளறி கொட்டினார். அப்போது அருகிலிருந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இறந்தது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என தெரிவித்தார். அதன்பின் சுதாரித்த செல்லூர் ராஜூ, ‘‘நான் கூட்டத்திலிருந்து இப்போதுதான் வந்தேன். அதான் எம்பி பாலசுப்பிரமணியம் என நினைத்து கொண்டேன்’’ எனக்கூறி கிளம்பி சென்றார்.

Related Stories: