தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ படிப்புக்கு சிறப்பு ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களின் குழந்தைகள் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘தீவிரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை சேர்ந்தவர்கள் அல்லது அவர்களின் குழந்தைகள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேர சிறப்பு இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அவர்கள் நீட் -2020 தேர்வின் அடிப்படையில் ஒதுக்கீட்டைப் பெறுவார்கள்.

இந்த நடைமுறை 2020-21ம் கல்வியாண்டிற்கு பொருந்தும். எனவே, தீவிரவாத தாக்குதலுக்கு ஆளான குடும்பங்களிலிருந்து விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும். தீவிரவாத சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குழந்தைகள் அல்லது வாழ்க்கைத் துணைவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட 15 நாட்களுக்குள், அத்தகைய விண்ணப்பங்களை சரிபார்த்து மாநில அரசுகள், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும்’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: