நாகை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் மோசடி.: ஒரே ஆண்டில் ரூ.345 கோடி மோசடி என்று குற்றச்சாட்டு

நாகை: நாகை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரே ஆண்டில் ரூ.345 கோடி நிதி மோசடி நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 2019-2020-ம் ஆண்டு பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் ஒரு ஏக்டேருக்கு 1148 ரூபாயும், மத்திய மற்றும் மாநில அரசுகள் 2852 ரூபாயும் மொத்தம் 21,670 ரூபாய் பிரிமியமாக செலுத்தியுள்ளனர். இதன்படி 1,39,000 ஏக்டேர் நிலங்களுக்கு 413,190,000 ரூபாய் பிரிமியமாக காப்பீடு நிறுவனங்கள் வசூலித்துள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு அளித்துள்ள இழப்பீட்டு தொகை வெறும் ரூ.68 கோடி மட்டுமே என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் எஞ்சிய 345 கோடி ரூபாய் நிதியை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பங்குபோட்டு கொண்டதாக அவர்கள் குற்றம் சாட்டினார். இதுபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இலட்சுமி புரம் கிராமத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்துக்கு போலியாக ஆவணங்கள் அளித்து ஆள்மாறாட்டம் நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு கிராம நிர்வாக அலுவலர் உடைந்தையாக இருந்தாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மோசடி செய்து பெறப்பட்ட பணத்தை நேரில் சென்று கேட்கும் விவசாயிகளுக்கு மட்டுமே கிராம நிர்வாக அலுவலர் கொடுப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். முறைகேடு தொடர்பாக இலட்சுமி புரம் கிராம இளைஞர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவர்களுக்கு உடைந்தையாக இருப்பவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்று விவசாயிகளிடம் ஒப்படைக்க அவர்கள் மணுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: