கொரோனா காலத்தில் குழந்தைகள், தாய்மார்களுக்கு தடுப்பூசி முறையாக அளிக்கப்பட்டதா? : திமுக எம்.பி. கனிமொழி கேள்விக்கு மத்திய அரசு பதில்!!

சென்னை: 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரை 44,13,896 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என அஷ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே இவ்வாறு பதில் அளித்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது. திமுக எம்.பி. கனிமொழி, கொரோனா காலத்தில் குழந்தைகள், தாய்மார்களுக்கு தடுப்பூசி முறையாக அளிக்கப்பட்டதா? என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை எத்தனை குழந்தைகள், தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் பொது முடக்க காலத்தில் தடுப்பூசி தவறவிட்டவர்களுக்கு மீண்டும் வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கனிமொழி கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரை 44,13,896 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என அஷ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார். எத்தனை குழந்தைகளுக்கு தடுப்பூசி அளிக்கப்படவில்லை என்ற விவரம் சேகரிக்கப்பட்டுள்ளன. பொதுமுடக்க காலத்தில் தடுப்பூசி தடையின்றி கிடைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது, என்றார்.

அதே போல், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டப்படும் என திமுக எம்.பி. கனிமொழி, பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துமூலம் பதில் அளித்துள்ள மத்தியஅரசு,  ஜப்பான் நிறுவனம் கொடுக்கும் கடன் அளவை பொறுத்தே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுவதற்கான  காலக்கெடு அமையும் என பதில் அளித்துள்ளது.

Related Stories: