கொரோனா போராளிகளை மத்திய அரசு அவமதிக்கிறது: ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களை மத்திய அரசு புறக்கணிக்கப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு சமீபத்தில் பதிலளித்த மத்திய சுகாதார துறை இணை அமைச்சர் அஸ்வினி சவுரே, ‘கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அல்லது உயிரிழந்த, செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு பராமரிக்கவில்லை,’ என்றார். தனது தாயார் சோனியா காந்தியின் மருத்துவ பரிசோதனைக்காக, அவருடன் ராகுல் காந்தியும் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கிருந்தபடியே, இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘பாத்திரங்களில்  ஒலி எழுப்ப செய்வதும், விளக்கேற்றுவதை காட்டிலும் பாதுகாப்பு மற்றும் மரியாதை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மோடி அரசானது, கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை ஏன் அவமானப்படுத்துகிறது? கொரோனா பாதித்த சுகாதார பணியாளர்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது, என்று கண்டித்துள்ளார்.

Related Stories: