'வருங்கால முதல்வர் ஓ.பி.எஸ்., நிரந்தர முதல்வர் எடப்பாடியார்'என தொண்டர்கள் வரவேற்பு.: அதிமுக-வில் மீண்டும் வெடித்த முதல்வர் பிரச்சனை

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அவசர உயர்நிலைக்குழு கூட்டம் நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தில் பொது குழுவை கூட்டுவது குறித்தும், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிக்கின்றன. முன்னதாக உயர்நிலைக்குழு  கூட்ட வரவேற்பில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை மீண்டும் எழுந்துந்துள்ளது. கடந்த சில மாதங்களாக அதிமுக-வில் பல குழப்பங்கள் நிலவி வருகிறது. அதிலும் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக நிற்கும் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்சனை இபிஎஸ்- ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நிலவி வருகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து  ஓ.பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வராக நியமிக்கப்பட்டார். அதற்க்கு பிறகு பன்னீர்செல்வத்திடம் இருந்து முதல்வர் பதவி பறிக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமியிடம் முதல்வர் பதவி ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஓ.பி.எஸ் ஒரு அணியும், இ.பி.எஸ் ஒரு அணியாகவும் செயல்பட்டனர். சில மாதங்கள் நடைபெற்ற வந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் இருவரும் ஒன்றாக இணைந்தனர். எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் செயல்பட தொடங்கினர்.

ஆனால் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே அடிக்கடி முதல்வர் வேட்பாளர் யார் என்ற மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் செயல்படுத்த வேண்டிய பணிகள் மற்றும் இதர பணிகள் குறித்து இன்று அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் உயர்மட்டக்குழு கூடியது.

அப்போது ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் ஆகிய இருவரும் தலைமை அலுவலகத்துக்கு வருகை தரும் போது நிரந்தர முதல்வர் எடப்பாடியார் என இ.பி.எஸ். ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். மேலும் வருங்கால முதல்வர் ஓ.பி.எஸ். என முழக்கமிட்டு ஓ.பி.எஸ்.க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் மீண்டும் முதல்வர் வேட்பாளர் பிரச்சனை மீண்டும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: