நாடு முழுவதும் காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா உள்ளதா? அறிக்கை கேட்கிறது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: நாடு முழுவதிலும் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என ஒவ்வொரு மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது நல மனுவில்,‘‘நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யப்படும் பட்சத்தில் காவல் நிலையத்தின் உள்ளே நடக்கும் சட்டவிரோத மற்றும் குற்றச் செயல்கள் அனைத்தும் உன்மையாக வெளிவரும்.

அதனால் இதுகுறித்து நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களில் இருக்கும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்று கேள்வியெழுப்பியதோடு, அதுகுறித்த அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: