கூடலூரில் மான் கொம்பு, யானை தந்தம் பதுக்கிய சித்த மருத்துவர் கைது

கம்பம்: கூடலூரில் வீட்டில் மான்கொம்பு, யானை தந்தம், புலி நகம், மயில்தோகை வைத்திருந்த சித்த மருத்துவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், கூடலூர், கர்ணம் பழனிவேல் பிள்ளை தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகன் நந்தகோபால்(42). சித்த மருத்துவர். இவரது வீட்டில் மான் கொம்பு, யானை தந்தம் இருப்பதாக கூடலூர் வனத்துறை ரேஞ்சர் அருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வனத்துறையினர், காவல் துறையினருடன் இணைந்து நந்தகோபால் வீட்டில்  அதிரடி சோதனை நடத்தினர்.

வீட்டில் வைத்திருந்த காய்கறி பையில் மான் கொம்பு இரண்டு ஜோடி, யானைத்தந்தம் சிறியது, புலி நகம் 2 மற்றும் மயில் தோகை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை ரேஞ்சர் அருண்குமார் பறிமுதல் செய்தார். பின்னர் நந்தகோபாலை கைது செய்து உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: