அருப்புக்கோட்டை கல்லூரியில் அதிநவீன வசதிகளுடன் உள்விளையாட்டு அரங்கம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்பிகே கல்லூரி வளாகத்தில், அதிநவீன வசதிகளுடன் 54 ஆயிரம் சதுர அடியில் எஸ்.பி.கே உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. இங்கு இறகுப்பந்து, மேஜை பந்து மற்றும் கேரம்போர்டு, செஸ், ஜிம் உட்பட பல உள்விளையாட்டுகள் நடைபெறும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. 1100 பேர் அமரும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. கீழே 3 ஆயிரம் பேர் அமரவும் எதிரே பெரிய மேடை ஒன்று உள்ளது. ஆண், பெண்ணுக்கு தனித்தனியான கழிப்பறைகள், காத்திருப்பு அறை, பார்வையாளர்அறை, உடைமாற்றும் அறை ஆகிய வசதிகள் உள்ளன.

இங்கு பள்ளி மாணவ மாணவிகள், அவர்கள் பிடித்த விளையாட்டிற்கு பயிற்சி பெறலாம். விளையாட்டுகளுக்கு தனித்தனியாக பயிற்சி கொடுக்க பயிற்சியாளர்கள் உள்ளனர். மேலும், உட்டன் கோர்ட், ரப்பர் கோர்ட், சிசிடிவி கேமராக்கள், லிப்ட் வசதி, ஆட்டோ மேட்டிக் ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. சர்வ தேச தரத்தில் இந்த உள்விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடக்கிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைக்கிறார்.  இதற்கான ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறைத் தலைவரும் எஸ்.பி.கே கல்விக் குழுமத் தலைவருமான சுதாகர் செய்து வருகிறார்.

Related Stories: