மத சிறுபான்மையினரை ஒடுக்க பாகிஸ்தான் அவதூறு சட்டங்களைப் பயன்படுத்துகிறது: ஐ.நாவில் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டு

ஜெனீவா: மத சிறுபான்மையினரை ஒடுக்க பாகிஸ்தான் அவதூறு சட்டங்களைப் பயன்படுத்துகிறது என ஐ.நாவில் இந்தியா குற்றம் சாட்டி உள்ளது. இந்தியாவுக்கு எதிராக வெறுக்கத்தக்க உரை நிகழ்த்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையை பயன்படுத்தியதற்காக பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும் மத சிறுபான்மையினருக்கு அவர்கள் தன்னிச்சையாக  நடந்துகொள்வது குறித்து மதிப்பீடு செய்ய பாகிஸ்தானை கேட்டுக்கொண்டது என கூறியுது. மத சிறுபான்மையினரின் மனித உரிமைகளை மீறுவதற்கு பாகிஸ்தான் அவதூறு சட்டங்களைப் பயன்படுத்துகிறது என்பதையும் இந்தியா மீண்டும் எடுத்து கூறியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக வெறுக்கத்தக்க உரை நிகழ்த்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையை பயன்படுத்தியதற்காக  இந்தியா வியாழக்கிழமை பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்ததாக இந்திய ஆலோசகர் பவுலோமி திரிபாதி கூறினார்.

மத சிறுபான்மையினரின் மனித உரிமைகளை மீறுவதற்கு பாகிஸ்தான் அவதூறு சட்டங்களைப் பயன்படுத்துகிறது என்பதையும் எடுத்து கூறினார். பாகிஸ்தான் உள்நாட்டிலும் அதன் எல்லைகளிலும் ஒரு வன்முறை கலாச்சாரத்தை தொடர்ந்து வளர்க்கும் ஒரு நேரத்தில் இது நிகழ்கிறது என எடுத்துரைத்தார். பாகிஸ்தானின் இழிவான மனித உரிமை பதிவுகள் மற்றும் மத மற்றும் இன சிறுபான்மையினரை பாரபட்சமாக நடத்துவது ஆகியவை சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான அக்கறைக்கு ஒரு காரணம் என்று அவர் கூறினார். பாகிஸ்தானில், பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்படுவதும், பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும், கட்டாயமாக மதம் மாற்றப்படுவதும், மீறுபவர்களை கட்டாய திருமணம் செய்து கொள்வதும் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியதாகவே உள்ளது. இது தொற்றுநோய் போல் நிலைமையை மோசமாக்கியுள்ளது என கூறினார்.

Related Stories: