புத்தாடை அணிவித்து, மங்கள ஓசை முழங்க வளர்ப்பு நாய்க்கு தடபுடல் சீமந்தம்: விருந்து வைத்து உற்சாகம்

பெங்களூரு: ஒரு வீட்டில் திருமணமாகி பெண் கர்ப்பம் அடைந்தால், மகப்பேறுக்கு முன் சீமந்தம் நடத்துவது வழக்கம். சிலர் 5, 7, 9 மாதங்கள் கர்ப்பிணியாக இருக்கும்போது, உறவினர்கள், நண்பர்களை அழைத்து சீமந்தம் நடத்துவார்கள். பல குடும்பங்களில் இது பெரிய விழாவாக ெகாண்டாடப்படுவதும் உண்டு. அந்தந்த குடும்பத்தினரின் வசதிக்கு ஏற்ப விருந்தோம்பல் ெகாடுத்து அசத்துவார்கள். இது, கர்ப்பிணிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதுடன் மகப்பேறு காலத்தில் ஏற்படும் பயத்தை ேபாக்கும். கர்நாடகா மாநிலம், விஜயபுரா நகரில் வசிக்கும் மல்லிகார்ஜுன பிருங்கிமட், தனது வீட்டில் அழகான பொமரேனியன் பெண் நாயை வளர்த்து வருகிறார்.

அதன் பெயர் சோனம்மா. தற்ேபாது கர்ப்பமாக இருக்கும் அதற்கு சீமந்தம் செய்ய முடிவு செய்தார் பிருங்கி. கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் சீமந்ததிற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. சோனம்மா வுக்கு புத்தாடை அணிவித்து, கழுத்தில் மாலை போட்டனர். சீமந்தம் செய்தால் என்னென்ன சீர்வரிசை வைக்கப்படுமோ அத்தனையும் வைக்கப்பட்டது. சோனம்மாவின் கால்களில் வெள்ளி கொலுசு, கழுத்தில் தங்க செயின் அணிவித்தனர். நாதஸ்வர இசையும் இசைக்கப்பட்டது. உறவினர்களை அழைத்து பாரம்பரியம்படி சோனம்மாைவ நாற்காலியில் அமரவைத்து சடங்குகள் செய்தனர். பின்னர், உறவினர்களுக்கு அறுசுவையுடன் விருந்தோம்பல் நடந்தது. சோனம்மா எங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருப்பதால் சீமந்தம் செய்ததாக மல்லிகார்ஜுன தெரிவித்தார்.

Related Stories: