நாடாளுமன்ற தொடரில் கேள்வி நேரத்தை நடத்த முடிவு: தினமும் 160 கேள்விகளுக்கு பதில்

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் எழுத்து மூலமாக கேட்கப்படும் 160 கேள்விகளுக்கு தினமும் பதில் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரையில் நடத்தப்படுகிறது. இதில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளி உட்பட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், கேள்வி நேரத்தை நடத்த மாநிலங்களவை தலைவரும், மக்களை சபாநாயகரும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், நேரடி கேள்விகளை எழுப்புவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. எழுத்து மூலமாக கேட்கப்படும் 160 கேள்விகளுக்கு தினமும் பதில் அளிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: