ஆஸியில் கொரோனா தொற்று காரணமாக 30 ஆண்டுகளுக்குப் பின் 7 சதவீதம் அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சி

மெல்பெர்ன்: ஆஸியில் கொரோனா தொற்று காரணமாக 30 ஆண்டுகளுக்குப் பின் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலால் பல்வேறு நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸியிலும் பொருளாதாரம் கொரோனா பரவலால் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அந்நாட்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 7 சதவீதம் அளவுக்கும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த காலாண்டில் மட்டும் அந்நாட்டில் இறக்குமதி 2.4 சதவீதமும், ஏற்றுமதி 18.4 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது.

காலாண்டில் மட்டும் ரூ 600 கோடி அளவிற்கு நாட்டின் நிகர சேமிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. 1991ம் ஆண்டிற்குப் பிறகு அங்கு பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்குப் பிறகு 10 லட்சம் பேர் ஆஸியில் வேலையிழந்துள்ளனர். இதனால் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ 16 லட்சம் கோடி மதிப்பிலான ஊக்குவிப்பு திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Related Stories: