இ.ஐ.ஏ வரைவு அறிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது: சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!!!

சென்னை:  இ.ஐ.ஏ வரைவு அறிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சுற்றுசூழல் வரைவு மதிப்பீட்டு அறிக்கையை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இதனால் சுற்றுசூழல் அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டுமென்றும் அதுவரை, வரைவு அறிக்கைக்கு தடைவிதிக்கக்கோரியும், மீனவர் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தபோது, சுற்றுசூழல் வரைவு அறிக்கை தமிழில் தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சங்கர நாராயணன், சுற்றுசூழல் தாக்க வரைவு அறிக்கையை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது என்றும், மேலும் இந்த வரைவு அறிக்கைக்கு பிற உயர் நீதிமன்றங்கள் இடைக்கால தடை விதித்துள்ளதாகவும் அவர் வாதிட்டார். தொடர்ந்து, இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்தார். இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த வழக்கில் போதிய விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டுமென்ற கோரிக்கையையும் முன் வைத்தார். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் உச்சநீதிமன்ற உத்தரவை பொறுத்து இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என கூறி வழக்கு விசாரணையை செப்டெம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: