ஆடை ஏற்றுமதி நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா: கம்பெனியை மூட பொதுமக்கள் வலியுறுத்தல்

திருக்கழுக்குன்றம்: தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதால், நிறுவனங்களை மூட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. திருக்கழுக்குன்றம் மார்க்கெட் மற்றும் பஸ் நிலையம் அருகே, 2 தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. இங்கு, திருக்கழுக்குன்றம் உள்பட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். கடந்த சில நாட்களாக, இந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் பலருக்கு, கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பணியாற்றியவர்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 32 பேருக்கு தொற்று உறுதியானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மேற்கண்ட நிறுவனங்களில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துபோதும், வருமானத்தையே நோக்கமாக கொண்டு, அந்த நிறுவனங்கள் மூடாமல் செயல்படுகின்றன. இதனால், தொற்று பரவல் அதிகரிக்கும் என தொழிலாளர்களும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். எனவே, பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மேற்கண்ட நிறுவனங்களை மூடுவதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: