கொடைக்கானல் ஏரிச்சாலையில் ராட்சத மரம் விழுந்தது: போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் நட்சத்திர ஏரிச் சாலையில் இன்று காலை ராட்சத மரம் வேருடன் சாய்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சில தினங்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சூறாவளி காற்றுக்கு ஆங்காங்கு மரங்கள் வேருடன் சாய்ந்து வருகின்றன. இந்நிலையில் இன்று காலை கொடைக்கானல் மற்றும் சுற்றுப்பகுதியில் பலத்த காற்ற வீசியது. இந்த காற்றில் நட்சத்திர ஏரிச் சாலையின் குறுக்கே ராட்சத மரம் ஒன்று திடீரென விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

மேலும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போலீசார், மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மின்சார வாரியத்தினர் அறுந்து கிடந்த மின்கம்பிகளை இணைத்து மின் விநியோகத்தை சீர் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: