அப்பளம் சாப்பிட்டால் கொரோனா ஒழியும் என்று சர்ச்சை ஏற்படுத்திய மத்திய அமைச்சர் அர்ஜுன் மேக்வாலுக்கு கொரோனா உறுதி..!!

டெல்லி: அப்பளம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடையலாம் என்று கூறி சர்ச்சை ஏற்படுத்திய மத்திய அமைச்சர் அர்ஜுன் மேக்வாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 4வது மத்திய அமைச்சர் இவர். கொரோனா உறுதி செய்யப்பட்டது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அர்ஜுன் மேக்வால், தமக்கு கொரோனா பாதிப்பு அறிகுறி இருந்ததை அடுத்து பரிசோதனை செய்ததில் முதல் கட்டமாக தொற்று இல்லை என்று வந்த நிலையில், 2வது கட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

ஆனால் தாம் நலமுடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில், உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் கடந்த சில நாட்களாக தம்முடன் தொடர்பில் இருந்த அனைவரும், பரிசோதனை செய்து உடல்நலத்தை கவனத்தில் கொள்ளும்படியும், ட்விட்டரில் அர்ஜுன் மேக்வால் வலியுறுத்தியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடந்த 2ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வேளாண்மைத்துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இதேபோன்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 4வது மத்திய அமைச்சர் அர்ஜுன் மேக்வால் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: